Press Release #4: Covid Education Crisis (Tamil Text)


Posted by Coordinator on May 24, 2021  /  1 Comments

கோவிட் கல்வி நெருக்கடியானது தலைமுறையினர்களை பாதிக்கும் கல்வி சோகமாக மாற ஒரு போதும் இடமளிக்க வேண்டாம்.

PD  # 15 – டாக்டர். தாரா டி மெல்

இன்று நாம் உலகம் முழுவதையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் ஒரு பயங்கரமான தொற்றுநோய் நிலைமையை எதிர்கொள்கிறோம். இதன் விளைவாக, 2020 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுவே முதல் முறையாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பாடசாலைகளை ஒரே நேரத்தில் மூட வேண்டி நேர்ந்தது. இந்த தொற்று நோய் முதலில் ஒரு சுகாதார நெருக்கடியை எமக்கு ஏற்படுத்தியது. அது பொருளாதார நெருக்கடியாக மாறியதை உணர சில மாதங்கள் ஆனது. மூன்றாவது நெருக்கடியாகியிருப்பது கோவிட் கல்வி நெருக்கடி ஆகும்.

தொற்று நோயிலிருந்து நாம் ஒரு நாள் மீண்டுவிட முடியும். ஒரு நாள் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் நாம் மீள முடியும். ஆனால் இந்த கல்வி நெருக்கடியின் நீண்டகால விளைவுகளை நாம் உணர்ந்து உடனடியாக செயல்படாவிட்டால் அது ஒரு பெரிய சோகமாகிவிடும்.

குறுகிய கால பிரச்சினைகள் நமக்கு ஓரளவிற்கு தெரியக்கூடியதாக உள்ளன.

ஆரம்பத்தில், பாடசாலைகள் 16 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு, நடமாட்ட தடை காரணமாக மாணவர்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். உலகின் 180 நாடுகளில் மிகச் சிறிய பகுதியில் தான் இந்த சூழ்நிலையிலிருந்து எந்தவித இடையூறும் இல்லாமல் நிகழ்நிலையில் தொடர்ந்து கற்றல் சாத்தியமானது. அப்பகுதியானது ஆசியாவில் சிங்கப்பூர் மற்றும் இரண்டு அல்லது மூன்று ஐரோப்பிய நாடுகள் மட்டுமே ஆகும். உலகில் பெரும்பாலான மாணவர்கள் கல்வி இல்லாமல் வீட்டில் சிக்கியவர்களாக இருக்கின்றார்கள்.

இலங்கையில் இவ்வாறு online நிகழ்நிலை  அல்லது இணைய வழியாக  பாடசாலையுடன் இணைக்க முடியாததால் கல்வியிலிருந்த வெளியேறிய மாணவர்கள தொகை 2020 நவம்பர் அளவில்  50% க்கும் மேற்பட்டது என நாங்கள் கண்டறிந்துள்ளோம். இணையத்தின் ஊடாக வாட்ஸ்அப் செய்திகளாக அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்புகளாக  குறிப்புகள் அல்லது ஒப்படைகளை மாணவர்களுக்கு அனுப்புவது கல்வி அல்ல.  அத்தோடு இணையத்தோடு ஈடுபடும் போது மாணவர்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சினையும் உள்ளது.

மாணவர்களுக்கு வீட்டுக்குள்ளேயே  அடங்கியிருப்பது கடினம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  அதற்கு மேலதிகமாக  எல்லா வீடுகளும் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருப்பதில்லை. தாயும் தந்தையும் சர்ச்சைகளில் ஈடுபடும்போது, அவை மாணவர்களை பாதிக்கின்றன. சில வீடுகளில், மாணவர்கள் துஷபிரயோகம் செய்யப்படுகிறார்கள். குறிப்பிட்ட அளவிலான மாணவர்களுக்கு மட்டுமே பாடசாலை மதிய உணவு வழங்கப்பட்டது. அதையும் இழக்கும்போது, ஊட்டச்சத்து பிரச்சினைகளும் எழுகின்றன. இவை ஓரளவு குறுகிய கால பிரச்சினைகள் ஆகும். அவற்றுக்கு குறுகிய காலத்தில் தீர்வுகளை வழங்க முடியும்.

ஆனால் தொற்று நோய் நிலைமையில் நீண்டகால விளைவுகளைப் பற்றி நாம் கவனத்திற் கொள்வது போதாது.

இந்த நீண்டகால விளைவுகள் என்ன?

முதலில் பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்த நிலையிலும் கற்றல் இடர்நிலையில் இருந்த மாணவர்கள்  பாடசாலைகள் மூடப்பட்டதால் கல்வியிலிருந்து முற்றிலும் விடுபடுகின்றார்கள். இரண்டாவதாக, பாடசாலை திறந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், காலத்தோடு மாணவர்களின் வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும்.  அவர்களின் கல்வி அதனுடன் கைகோர்த்துக் கொள்ளாவிட்டால், அந்த மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சியை நிரப்புவது குறைபாடாக இருக்கும். இது இப்போது உலகெங்கிலும் உள்ள கல்வி நிபுணர்களால்  Covid learning lost அல்லது கோவிட் கல்வி இழப்பு என அழைக்கப்படுகிறது. இந்த இழப்பின் அளவைப் புரிந்து கொள்ள நாம் diagnosis tests  எனும் கண்டறியும் சோதனைகள் செய்ய வேண்டும். அதன்படி, ஒவ்வொரு மாணவர்க்கும் பரிகார கற்பித்தல் செய்யப்பட வேண்டும்.

இந்த கோவிட் தொற்று நிலை  இன்று  நாளை தணியக்கூடிய ஒன்றல்ல. எனவே, வேறு எதற்கும் முன்னர், தொற்றுக் காலத்தில் பாடசாலைகளை முடிந்தவரை திறந்த நிலையில் வைத்திருக்க ஒரு நிகழ்ச்சித்திட்டம் இருக்க வேண்டும். எல்லா பாடசாலைகளும் ஒரே நாளில் திறக்கப்பட வேண்டியில்லாமல் அது அந்தந்த பாடசாலை சார்ந்த தீர்மானங்களாக இருக்க வேண்டும். அதற்கு முன்னர் ஆசிரியர்கள் அத்தியாவசிய முன் கள நிலை பணியாளர்களாக கருதப்பட்டு, ஒவ்வொரு ஆசிரியருக்கும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். இதனை அதிக இடர்நேர்வு உள்ள பகுதிகளில் தொடங்கலாம். நோய்த்தொற்றுக்கு பாடசாலை மாணவர்கள் உள்ளாகி இருப்பதை அல்லது இல்லாதிருப்பதை கிரமமாக சோதிக்க செலவு குறைந்த சோதிப்பு முறையைப் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில், முன்னர் குறிப்பிட்டது போல, ஒவ்வொரு மாணவர்க்கும் அவர்களின் கல்வி நிலை குறித்த மதிப்பீட்டு சோதனைக்குப் பின்னர் பரிகாரம் அளிக்கும் வேலைத்திட்டம் இருக்க வேண்டும்.

இந்த கட்டத்தில் எம்மால் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது போனால் இந்த தொற்றுநோயின் கல்வி நெருக்கடி நிச்சயமாக தலைமுறையினரை பாதிக்கும் ஒரு கல்விச் சோகமாக இருக்கும் என்பது நிச்சயம்.

1 Comment


 1. Velummayilum Senthan

  Forum பல நல்ல கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறமை மிகவும் பாராட்டுக்குரியது.வரவேற்கிறேன். தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருகிறேன்.ஒரு வேண்டுகோள் சிங்கள மொழி மூல கலந்துரையாடலுக்கு ஆங்கிலத்தில் Subtitle கொடுத்தால் நாம் மிகுந்த பயனடைவோம்.
  கொவிட் பெருந்தொற்றுக்கால கல்வி இழப்பை ஈடுசெய்வதற்காக சில நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் எடுக்க வேண்டும்

  கலைத்திட்ட அமுலாக்கம் தொடர்பாக
  2020,2021 ஆகிய இரு வருட பாத்திட்டங்களை கருப்பொருள் அடிப்படையாக Learning matrix அடிப்படையில் ஒருங்கிணைக்க வேண்டும்
  ஆரம்ப பிரிவில் Key stage 1&2 இல் Environmental related activities பாடத்தின் அடிப்படையில் 16 கருப்பொருட்களிலுடன் மொழி, கணிதம் பாடங்களின் பாடத்திட்டம் ஒருங்கிணைப்பதுடன் அவற்றறுடன் இணைந்த வகையில் பரிகார கற்பித்தல் நடவடிக்கையும் அடிப்படை எழுத்து ,வாசிப்பு செயற்பாடுகள் மேலதிகமாக இணைக்கப்பட்டால் சிறப்பு.Attention span அதிகரிக்க Mindful meditation practices மற்றும் உட.ற் பயிற்சி இணைந்தால் சிறப்பு.

  ஆசிரியர் பயிற்சி தொடர்பாக

  *Growth mindset இற்கான பயிற்சிகள். அர்ப்பணிப்பு ,பிள்ளை மீது நம்பிக்கை இவை தொடர்பானவை.
  *Mindful classroom practices தொடர்பானவைகள்.
  *Formative assessment, diagonistic assessment, questioning techniques&feed back feed forward techniques, action research, team teaching,team building, facilitation skills,Handling with parents who has with at risk learners இவை மிக முக்கியமானவை.
  மேற்குறித்த விடயங்களில் Sectional heads, grade codinators,deputy principal(curriculum development),ISAs முதலானவர்களுக்கு மிக அவசியம்.

  At risk learners களுடைய பெற்றோர்களுக்கு தமது பிள்ளைகளது பாட விடயங்கள், அவரவர் கற்றல் நிலை,வீட்டு வேலை தொடர்பில் தொடர் கலந்துரையாடல் மாலை வேளைகளில் செய்ய வேண்டும் இதில் கிராம உத்ததியோத்தர்,சமுர்த்தி உ.தியோகத்தர்கள் இணைக்கப்பட்டால் சிறப்பு.
  (எனது வடக்கு மாகாண கல்வி அனுபவ அடிப்படையில் தாழ்மையான சில கருத்துக்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

*