Press Release #5: A Roadmap for Opening schools – June 7, 2021 (In English/Sinhala/Tamil)


Posted by on June 7, 2021  /  1 Comments

A Roadmap for Reopening Schools | පාසැල් නැවත ඇරීම සඳහා මාර්ග සැලැස්මක් | பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஒரு திட்டவரைபடம்

We are in the thick of a pandemic, but relief is on the horizon thanks to science. More and more vaccines are becoming available and self-tests for Covid-19 are becoming cheaper. This is exactly the time for Sri Lanka’s Ministry of Education and Provincial authorities to get into action with a roadmap in hand. Following is a roadmap based on our previous ten-point policy for mitigating the Covid education crisis of children being out of school for 16+ months.

1. Designate 240,000 teachers as a priority group for vaccinations
The Ministry of Health has published a priority list with ‘government officers in field’ as a fourth priority category. Extrapolating from ministry estimates, we find that 4.4 million doses including boosters would cover categories 1-3. COVAX has committed 8.3 million doses and other donations and purchases are expected to cover any delays in COVAX commitments. If the government sticks to its priority plan, teachers can be vaccinated after the 4.4m million priority doses are administered.

2. Place orders for low-cost self-test kits immediately
There is evidence that the transmissibility of SARS-CoV 2 is highest teacher-to-teacher and among older students, hence our focus on vaccinating teachers. If older students can be vaccinated, well and good, but regular testing of teachers and older students is a must. The ministry should be on the lookout for low-cost test kits (e.g., from India) and place orders now.

3. Require schools to focus on core-competencies and the welfare of home-bound students
Currently schools are engaging with only those who can connect BPO or OPO (Both parties online / One party online) methods. Teachers are delivering notes and assignments on 13 or more subjects in some cases to 50% of students, when common sense dictates that schools should focus on delivering core competencies to ALL students by whatever means. It is not impossible. Sri Lanka has an extensive network of school and teachers; students have textbooks at home and nearly universal voice telephony coverage. It is not too late for the Ministry or the National Institute of Education to identify core competencies.

There also should be an online module to help teachers to be listeners to their students and refer families or students to appropriate committees at the Grama Niladhari level to follow up with psychosocial, nutritional, and other welfare issues as needed.

4. Mandate bi-annual diagnostic tests on ALL students to assess their core-competencies
Schools or divisional or zonal education offices already have the capability to develop and administer these tests. Central ministry may issue some guidelines and mandate such tests, until national examination can be held. Schools should use these for identifying learning gaps and taking remedial action.

5. Postpone all national exams for at least for one year
National Exams in 2021 should be scheduled only after diagnosing learning gaps of students and applying remedial measures. Priority should be in getting ALL students up to a minimum standard in core competencies. Until formal admissions can made, universities and other tertiary institutions should post their year-1 curriculum as open online courses to all who complete 13 years of education.

6. Open schools gradually, delegating decisions to schools
The Ministry of Education has already issued a circular authorizing schools to take decisions regarding openings and closings in consultation with the MoH for the area, but when the ministry makes a declaration that all schools should be closed, school-based committees cannot override such a directive. We request the Ministry to lift the current directive and make local decision-making the modus operandi.

Sujata Gamage & Tara de Mel | Co-Coordinators

පාසැල් නැවත ඇරීම සඳහා මාර්ග සැලැස්මක්

මාධ්‍ය නිවේදනය, 7 ජුනි 2021

අප අද සිටින්නේ වසංගතයක් මැදයි. නමුත් විද්‍යාවට ස්තූති වන්න ඉදිරියේදී මේ වසංගතයෙන්  මිදීමක්  ගැන අපට බලාපොරත්තු තබා ගත හැක. ලෝකයේ කොවිඩ් -19 එන්නත් නිෂ්පාදන වැඩි වෙමින් පවතී; ආසාදන පරීක්ෂණ සඳහා අඩු මිලට ගෙදරදීම කර ගත හැකි කට්ටල  වෙළඳ පොලට එමින් පවතී. වසංගතය ලිහිල් වෙනවාත් සමග පාසැල් නැවත සක්‍රිය  කිරීමේ  මාර්ග සැලැස්මක් ක්‍රියාත්මක  කිරීමට  ශ්‍රී ලංකාවේ අධ්‍යාපන අමාත්‍යාංශයට සහ පළාත් බලධාරීන්ට මේ සුදුසු මොහොතයි. ශ්‍රී ලංකා අධ්‍යාපන සංසදයෙන්  අද අපි ඉදිරිපත් කරන්නේ  කෝවිඩ් අර්බුදය අවම කිරීම සඳහා අප විසින් මීට පෙර ඉදිරිපත්කළ දස වැදෑරුම්  ප්‍රතිපත්තිය මත පදනම්වූ පහත දැක්වෙන මාර්ග සැලැස්මයි.

  1. ගුරුවරුන් 240,000 එන්නත් ප්‍රමුඛතා කණ්ඩායමක් ලෙස නම් කිරීම

සෞඛ්‍ය අමාත්‍යාංශය විසින් ‘ක්ෂේත්‍රයේ සේවය කරන රජයේ නිලධාරීන්’ සිව්වන ප්‍රමුඛතා කාණ්ඩයක් ලෙස ප්‍රකාශයට පත් කර තිබේ. ඊට ප්‍රථම කණ්ඩායම් තුන සඳහා  පිළිබඳ සෞඛ්‍ය අමාත්‍යංශ ඇස්තමේන්තු වලට අනුව පළමුවන හා දෙවැනි  මාත්‍රා දෙකම දීමට මාත්‍රා  මිලියන 4.4 ක් අවශ්‍ය වන බව පෙනේ. COVAX විසින් මාත්‍රාවන් මිලියන 8.3 ලබා දීමට නියමිත අතර, එහිදී සිදු වන ප්‍රමාදයන් අනිකුත් පරිත්‍යාග හෝ  මිළදී ගැනීම් තුලින් ආවරණය කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. රජය සිය ප්‍රමුඛතා සැලැස්ම අනුව ක්‍රියා කිරීමට කැපවේ නම්, මිලියන 4.4 ක ප්‍රමුඛතා එන්නත් මාත්‍රාවන් ලබා දීමෙන් පසු ගුරුවරුන්ට එන්නත්  ලබා දීම ඇරඹිය හැක.

  1. අඩු වියදම් කෝවිඩ් ආසාදන පරීක්ෂණ කට්ටල වහාම ඇණවුම් කිරීම

COVID-19 සම්ප්‍රේෂණය ගුරුවරයාගෙන් ගුරුවරයාට හෝ වැඩිහිටි සිසුන් අතරට බොහෝ දුරට සීමා වන බවට  සාක්ෂි  ඇත. එමනිසා  පළමුව ගුරුවරුන්ට හා හැකිනම් වැඩිහිti සිසුන්ට ද එන්නත ලබා දීමෙන් පසු  දෙවන අත්‍යවශ්‍ය පියවරක් ලෙස සිසුන් සෑම දෙනාටම  ආසාදන තත්වයන් ඇති  නැති බව කාලීනව පරීක්ෂා කිරීම සිදු කළ යුතුය. එම නිසා අඩු වියදම් පරීක්ෂණ කට්ටල (උදා: ඉන්දියාවේ සිට) දැන්ම ඇණවුම් කළ යුතුය.

  1. සෑම සිසුවකුටම අත්‍යවශ්‍ය නිපුණතා ලබා දීම සහ ගෙදරට සීමා වූ සිසුන්ගේ සුභසාධනය කෙරෙහි පාසැල් යොමු කිරීම

වසංගත සමයේ ගුරුවරුන්ට දුරස්ථ අධ්‍යාපනය සඳහා  සම්බන්ධ කරගැනීමට හැකිවී ඇත්තේ  වට්ස්ඇප් වැනි සමාජ මාධ්‍ය වලට පිවිසිය හැකි  සිසුන්  50% ක් සමග පමණි. මෙහිදී  විෂයයන් 13 ක් හෝ ඊට වැඩි ගණනක් සඳහා මෙම සිසුන්ට  සටහන් හා පැවරුම් ලබා දීමට ගුරුවරුන් මහත් උත්සාහයක යෙදෙති. දෙමාපියන්ද හැකි පමණින් අවශ්‍ය ඩේටා වලට වියදම් කරති. නමුත් විය යුත්තේ 50%කට අනවශ්‍ය ලෙස කරුණු පැටවීම නොව සියලු සිසුන්ට ගණිතය, මවු බස හා ඉංග්‍රීසි  යන හර විෂයන් සඳහා  නිපුණතා ලබා දීමට පාසල් මෙහෙයවීමය.

එය ඇත්තටම කළ නොහැක්කක් නොවේ. ශ්‍රී ලංකාව තුළ පාසල් 10,000 ක් හා ගුරුවරුන් 240,000 කට වැඩි  පුළුල් ජාලයක් ඇත. සෑම සිසුවකුටම පෙළපොත් ලබා දී ඇත. සෑම නිවසකටම වාගේ ජංගම දුරකතනයකින් සම්බන්ධ විය හැක. අවශ්‍ය වන්නේ තව දුරටත් ප්‍රමාද නොකර  අමාත්‍යංශය විසින් ජාතික අධ්‍යාපන ආයතනයව දැනටමත් සෑම විෂයකටම සෑම ශ්‍රේනියකටම හඳුන්වා දී ඇති ඉගෙනුම් නිපුණතාවන්ගෙන් අත්‍යවශ්‍ය නිපුණතා වෙන් කර දීමයි.

දෙවනුව ගෙවල් වලට කොටුවී සිටින තම සිසුන්ට සවන් දෙමින් ඔවුනගේ අධ්‍යාපනයට වඩා වැදගත් වන පෝෂණය, සෞඛ්‍යය, මනෝ-සමාජීය සුවතාව හා වෙනත් ඔවුනගේ  සුබ සාධනය පිළිබඳ ගැටළු හඳුනා ගෙන ඒ පිළිබඳව ක්‍රියාත්මක වීම සඳහා ග්‍රාම නිලධා රි මට්ටමේ හෝ කොට්ඨාස මට්ටමේ අදාළ කමිටු දැනුවත් කිරීම පිළිබඳව ගුරුවරුන්ට පුහුණුවක් ලබාදෙන ඔන්ලයින්  මොඩියුලයක් හඳුන්වා දිය යුතුයි.

  1. සියළුම සිසුනගේ අත්‍යවශ්‍ය නිපුණතා සාධනය තක්සේරු කිරීම සඳහා ද්වි-වාර්ෂික පරීක්ෂණ නියම කිරීම.

පාසල් හෝ ප්‍රාදේශීය හෝ කලාපීය අධ්‍යාපන කාර්යාලවලට දැනටමත් මෙම පරීක්ෂණ සංවර්ධනය කිරීමට හා පරිපාලනය කිරීමට හැකියාවක් ඇත. ජාතික විභාගය පැවැත්වෙන තුරු මධ්‍යම අමාත්‍යාංශය විසින් යම් මාර්ගෝපදේශ නිකුත් කොට එවැනි පරීක්ෂණ අනිවාර්ය කළ හැකිය. ඉගෙනුම් හිඩැස් හඳුනා ගැනීම සහ පිළියම් යෙදීම සඳහා පාසල් මේවා භාවිතා කළ යුතුය.

  1. සියලුම ජාතික විභාග අවම වශයෙන් වසරකට කල් තැබීම

2021සඳහා  ජාතික විභාග සැලසුම් කළ යුත්තේ ද්වි වාර්ෂික පරීක්ෂණ වලින් සිසුන්ගේ ඌනතා හඳුනාගෙන පිළියම් යෙදීමෙන් පසුවය. ප්‍රමුඛතාවය දිය  යුත්තේ සියළුම සිසුන්ට  අත්‍යවශ්‍ය  නිපුණතාවන්ගෙන් අවම ප්‍රමිතියක් ලබා දීමයි. විධිමත්ව ජාතික විභාගපවත්වන තුරු විශ්ව විද්‍යාල සහ අනෙකුත් තෘතීයික ආයතන වල පළමු වසර විෂය මාලාව ඔන්ලයින් පාඨ මාලාවන් වසර 13 ක අධ්‍යාපනය සම්පූර්ණ කරන සැමට විවෘත කිරීම පිළිබඳව සලකා බැලිය යුතුයි. .

  1. තීරණය එක් එක් පාසල වෙත පවරමින් හැකි ඉක්මනින් පාසැල් විවෘත කිරීම

අධ්‍යාපන අමාත්‍යංශය විසින් දැනටමත් පාසැල්  විවෘත කිරීම් සහ වසා දැමීම් සම්බන්ධයෙන් ප්‍රදේශයේ අදාළ සෞඛ්‍ය බලධාරීන්ගේ  උපදෙස් අනුව තීරණය කිරීම සඳහා වැඩ පිළිවෙලක් අනුමත කර ඇත. නමුත් සියලුම පාසල් වසා දැමිය යුතු බවට අමාත්‍යාංශය ප්‍රකාශයක් කරන විට පාසල් පදනම් කරගත් කමිටුවලට එවැනි නියෝගයක් ඉක්මවා යා නොහැක. අමාත්‍යාංශය එම ප්‍රකාශය  ඉවත් කර සෑම විටකම  පාසැල් පාදකව   තීරණ ගැනීමේ අවස්ථාව පාසැල් වලට ලබා  දෙන ලෙස අප විසින් යෝජනා කරමු.

ටාරා ද මැල් සහ සුජාතා ගමගේ ] සමසම්බන්ධීකාරක

 

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஒரு திட்டவரைபடம்

இன்று நாம் ஒரு தொற்றுநோய் நிலவர மத்தியில் இருக்கிறோம். ஆனால் விஞ்ஞானத்துக்கு நன்றி சொல்ல எதிர்காலத்தில் ஒரு சிகிச்சையை குறித்து எதிர்பார்ப்பு வைக்கலாம். கோவிட் -19 தடுப்பூசி உற்பத்தி உலகில் அதிகரித்து வருகிறது; நோய்த்தொற்று நிலையை குறைந்த விலையில் வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ளும் சாதனங்கள்  சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றன. தொற்றுநோய் தணிகின்ற நிலையோடு இலங்கை கல்வி அமைச்சுக்கும் மாகாண அதிகாரிகளுக்கும் பாடசாலைகளை மீண்டும் இயங்கச்செய்வதற்கு ஒரு திட்டவரைபடத்தை நடைமுறை படுத்தவதற்கு தற்போது இருப்பது  ஒரு சரியான தருணமாகும். கோவிட் நெருக்கடியைத் தணிப்பதற்கான எங்கள் முந்தைய பத்து அம்சக் கொள்கையின் அடிப்படையில் இலங்கை கல்வி அமையத்திலிருந்து பின்வரும் திட்டபாதை வரைபடத்தை இன்று முன்வைக்கிறோம்.

  1. தடுப்பூசி முன்னுரிமைக் குழுவாக 240,000 ஆசிரியர்களை பெயரிடல்

சுகாதார அமைச்சு ‘புலத்தில் பணிபுரியும் அரச அலுவலர்களை’ நான்காவது முன்னுரிமை வகையாக  அறிவித்துள்ளது. அதற்கு முன்னர், முதல் மூன்று வகையினர் தொடர்பாக சுகாதார அமைச்சு மதிப்பீட்டின் அடிப்படையில் முதலாவது மற்றும் இரண்டாவது மருந்தளவுகளை வழங்க 4.4 மில்லியன் மருந்தளவுகள்; தேவைப்படும் என்று தெரிகின்றது. COVAX இனால்  8.3 மில்லியன்; மருந்தளவுகள் வழங்கவிருப்பதோடு, அதன் போது ஏற்படும்  தாமதங்களை பிற நன்கொடைகள் அல்லது கொள்வனவு செய்தல் மூலம் ஈடுசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் தனது முன்னுரிமை திட்டமாக இதனை செயற்படுத்த உறுதிபூண்டிருந்தால், 4.4 மில்லியன் முன்னுரிமை தடுப்பூசி அளவுகளை வழங்கிய பின்னர் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட ஆரம்பிக்கலாம்.

  1. குறைந்த விலை கோவிட் தொற்று சோதனை சாதனங்களை உடனடியாக பெற கட்டளையிடல்

Covid-19 பரவலானது ஓர் ஆசிரியரிடமிருந்து இன்னோர் ஆசிரியருக்கோ அல்லது வயது வந்த மாணவர்களிடையே பெரும்பாலும் எல்லைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளன. எனவே, ஆசிரியர்கள் மற்றும், முடிந்தால், வயது வந்த மாணவர்களுக்கு முதலில் தடுப்பூசி ஏற்றி, இரண்டாவது கட்டமாக அனைத்து மாணவர்களும் அவ்வப்போது தொற்றுநிலை உள்ளதா இல்லையா என்பது பரிசோதனை செய்யப்பட வேண்டும். எனவே, குறைந்த செலவிலான சோதனை சாதனங்களை (உதாரணமாக இந்தியாவிலிருந்து) இப்போதே பெற விநியோக கட்டளை பிறப்பிக்க வேண்டும்.

  1. அனைத்து மாணவர்களுக்கும் அத்தியாவசிய தேர்ச்சி திறன்களை வழங்குதல் மற்றும் வீடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனை நோக்கி பாடசாலைகளை வழிநடத்துதல்

தொற்றுநோய்களின் போது, ஆசிரியர்கள் தொலைக்கல்வியுடன் இணைக்கக்கூடியதாக இருப்பது வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களை அணுகக்கூடியதாக இருக்கும் 50% மாணவர்கள் மட்டுமே. இதன் போது 13 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கான குறிப்புகள் மற்றும் ஒப்படைகளை இந்த மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர்கள் இங்கு பெரும் முயற்சி செய்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுக்கு இயலுமான  அளவு டேட்டாவுக்காக செலவிடுகிறார்கள். ஆனால் செய்ய வேண்டியது 50% தேவையின்றிய பாட சுமைகளை வழங்காது , ஆனால் கணிதம், தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய முக்கிய பாடங்களில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சிகளை வழங்க பாடசாலைகளை வழிநடத்துவதாகும்.

இது உண்மையில் சாத்தியமற்றது அல்ல. இலங்கையில் 10,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மற்றும் 240,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட பரந்த வலையமைப்பு உண்டு. ஒவ்வொரு மாணவருக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டையும் மொபைல் போன் மூலம் இணைக்க முடியும். தேவை என்னவென்றால், ஒவ்வொரு தரத்திலும் ஒவ்வொரு பாடத்திற்கும் அமைச்சு ஏற்கனவே தேசிய கல்வி நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ள கற்றல் தேர்ச்சி திறன்களிலிருந்து அத்தியாவசிய தேர்ச்சி திறன்களை மேலும் தாமதமின்றி பிரித்தறிவதாகும்.

இரண்டாவதாக, வீட்டில் சிக்கியுள்ள தங்கள் மாணவர்களுக்குச் செவிமடுத்து அவர்களுக்கு கல்வியை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததான போசாக்கு, சுகாதாரம், உள- சமூக நலம் மற்றும் பிற நலன் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கிராம அலுவலர் மட்டத்திலோ அல்லது கோட்ட மட்டத்திலோ தொடர்புடைய குழுக்களுக்கு அறியத்தருவது தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிகழ்நிலை  கற்றல்பொதியை  அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

  1. அனைத்து மாணவர்களின் அத்தியாவசியத் தேர்ச்சி அடைவை கணிப்பீடு செய்ய இரு ஆண்டு பரீட்சைகளை பரிந்துரைத்தல்.

பாடசாலைகள் அல்லது கோட்ட அல்லது வலய கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கனவே இத்தகு பரீட்சைகளை தயார்செய்து நிர்வகிக்கவும் இயலுமை உள்ளது. தேசிய பரீட்சை நடைபெறும் வரை, மத்திய அமைச்சு சில வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அத்தகைய பரீட்சைகளை கட்டாயமாக்கலாம். கற்றல் இடைவெளிகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய பாடசாலைகள் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

  1. அனைத்து தேசிய பரீட்சைகளையும் குறைந்தது ஒரு வருடத்திற்கு ஒத்திவைத்தல்

இரு ஆண்டு பரீட்சைகள் மூலம் மாணவர்களின் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்த பிறகு 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய பரீட்சைகளை திட்டமிட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தரமான அத்தியாவசிய தேர்ச்சிகளை வழங்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். முறையான தேசிய பரீட்சைகள் நடைபெறும் வரை 13 ஆண்டு கல்வியை நிறைவு செய்த அனைவருக்கும் முதல் ஆண்டு பாடத்திட்ட நிகழ்நிலை பாடநெறிகளை ஆரம்பிக்க பல்கலைக்கழகங்களும் பிற மூன்றாம் நிலை நிறுவனங்களும் கவனத்திற் கொண்டு பரிசீலிக்க வேண்டும்.

  1. ஒவ்வொரு பாடசாலைக்கும் தீர்மானிக்கும் முடிவை வழங்குவதன் மூலம் கூடிய விரைவில் பாடசாலைகளைத் திறத்தல்

பிரதேசம் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி பாடசாலைகள் திறக்கப்படுவதையும் மூடுவதையும் தீர்மானிக்கும் திட்டத்திற்கு கல்வி அமைச்சு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட வேண்டும் என்று அமைச்சு அறிவிக்கும்போது, பாடசாலை சார்ந்த குழுக்கள் அத்தகைய உத்தரவுக்கு அப்பால் செல்ல முடியாது. அமைச்சு  அந்த கூற்றை அகற்றி, எல்லா நேரங்களிலும் பாடசாலை சார்ந்த முடிவுகளை எடுக்க பாடசாலைகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்.

1 Comment


  1. Sathasivam Sasitharan

    Excellent and pragmatic policy brief. Thanks to the contributors.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

*